செந்தில் பாலாஜிக்கு செக்வைக்கத் தயாராகும் பாஜக!

கோவையில் பேட்டியளிக்கும் செந்தில் பாலாஜி..
கோவையில் பேட்டியளிக்கும் செந்தில் பாலாஜி..

பாஜகவினரை திமுகவுக்கு இழுப்பது, அண்ணாமலையை பதிலுக்குப் பதில் விமர்சிப்பது என தீவிரம் காட்டி வருகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. கோவை சிலிண்டர் வெடி விபத்து தொடர்பாக அண்ணாமலை எழுப்பிய சந்தேகங்களுக்கு பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி, “முதலில் அண்ணாமலையைத் தான் என்ஐஏ விசாரிக்க வேண்டும்” என்று சூடானார். இதையெல்லாம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கவனத்துக்குக் கொண்டு சென்ற அண்ணாமலை, ”இதற்கு மேலும் செந்தில் பாலாஜியை பேசவிட்டுக் கொண்டிருந்தால் திமுகவில் இருக்கும் மற்றவர் களுக்கும் துணிச்சல் வந்துவிடும். இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டுமானால் செந்தில் பாலாஜியை அடக்கிவைக்க வேண்டும்” என்று சொன்னாராம்.

அண்ணாமலை
அண்ணாமலை

அனைத்தையும் கவனமாகக் கேட்டுக்கொண்ட அமித் ஷா உரிய நடவடிக்கை எடுப்பதாக அண்ணாமலைக்கு உத்தரவாதம் அளித்திருப்பதாகச் சொல்கிறார்கள். செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பலரிடமும் பணம்பெற்று ஏமாற்றியதாக சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் அமலாக்கத்துறை வழக்குத் தொடுத்துள்ளது. அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கில் அமலாக்கத்துறையை களத்தில் இறக்கிவிட்டு மேற்குவங்க ரீதியில் அதிரடிகளை நடத்தி செந்தில் பாலாஜிக்கும் திமுகவுக்கும் ஷாக் கொடுக்க பாஜக மேல்மட்டத்தில் இப்போது தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறதாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in