அந்த ஃபிளெக்ஸ்...
அந்த ஃபிளெக்ஸ்...

ராகுல் பயணத்தில் சர்ச்சைக்கு வித்திட்ட சாவர்க்கர் ஃபிளெக்ஸ்!

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் இப்போது கர்நாடகாவை மையம் கொண்டிருக்கும் நிலையில் ராகுலை வரவேற்கும் வகையில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ-வான ஹரீஸ் வைத்திருக்கும் ஃபிளக்ஸ் போர்டுகளில் சாவர்க்கர் படமும் பளிச்சிடுகிறது. ஏற்கெனவே கேரளத்திலும் ஓர் இடத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்களோடு சாவர்க்கர் படமும் இருந்ததால் சர்ச்சையானது.

ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி அதையே சிறுபான்மை மக்களிடம் பெரிதாக பரப்புரை செய்யும் என்பதால் சாவர்க்கரின் படத்தை ராகுலே மறைக்கச் சொன்னாராம். இதனால் உடனடியாக சாவர்க்கர் படம் அகற்றப்பட்டது. அப்படியிருக்கையில், கர்நாடக காங்கிரஸாரும் சாவர்க்கர் படத்தைப் போட்டு சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறார்கள்.

கர்நாடகா மற்றும் கேரள பாஜகவினர் இந்த விஷயத்தை அத்தனை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் தமிழக பாஜகவினர் இதைவைத்து சிண்டுமுடிந்து கொண்டிருக்கிறார்கள். ராகுல் காந்தி கன்னியாகுமரி வந்தபோது பாதிரியார்களை சந்தித்துப் பேசினார். அந்தப் படத்தையும் ராகுலுக்காக வைக்கப்பட்ட ஃபிளெக்ஸில் சாவர்க்கர் இருக்கும் படத்தையும் எடுத்துப்போட்டு, ‘ராகுலின் இரட்டை வேடம் இதுதான்’ என வாட்ஸ் - அப் குழுக்களில் வைரலாக்கிக் கொண்டிருக்கிறார்கள் குறும்பான குமரி பாஜககாரர்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in