பூட்டிய வீட்டை காவல்காக்கும் ஆர்.பி.உதயகுமாரின் ஆட்கள்!

ஐயப்பன் வீட்டுவாசலில் தவமிருக்கும் உதயகுமாரின் ஆட்கள்...
ஐயப்பன் வீட்டுவாசலில் தவமிருக்கும் உதயகுமாரின் ஆட்கள்...

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அதிமுககாரர்கள் இன்னும் என்னென்ன கூத்துகளை எல்லாம் அரங்கேற்றப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதற்கு உதாரணம் இந்த நிகழ்வு. உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ-வான ஐயப்பன் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தீவிர விசுவாசி. அப்படிப்பட்டவர், டிடிவி தினகரனின் அட்வைஸ்படி அண்மையில் ஓபிஎஸ்சை சந்தித்து அவருக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத ஆர்.பி.உதயகுமார், ஐயப்பனிடம் சமரசம் பேச தனது ஆட்களை உசிலம்பட்டியிலுள்ள ஐயப்பன் வீட்டுகே அனுப்பினாராம். தன்னைத் தேடி உதயகுமாரின் ஆட்கள் வருவது தெரிந்ததும் வீட்டைவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டாராம் ஐயப்பன். அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, அவர் சென்னையில் இருப்பதாகத் தகவல் சொல்லி இருக்கிறார்கள். ஆனாலும், ஐயப்பன் வருகையை எதிர்பார்த்து உதயகுமாரின் தூதுவர்கள் அவரது வீட்டை வட்டமிட்டுக்கொண்டே இருக்கிறார்களாம். இதிலென்ன வேடிக்கை என்றால்... உதயகுமாரால் அனுப்பப்பட்டதாகச் சொல்லப்படும் தூதுவர்கள், பூட்டிக்கிடக்கும் ஐயப்பன் வீட்டு வாசலில் சாவகாசமாக உட்கார்ந்து போட்டோ எடுத்து அதை வாட்ஸ் அப்பில் வைரலாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in