முதல்வரை சந்திக்கும் முயற்சியில் ராம மோகன ராவ்!

ராம மோகன ராவ்
ராம மோகன ராவ்

அதிமுக ஆட்சியில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரிடமுமே நெருக்கமாக இருந்தவர் தமிழ்நாடு முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ். பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டாலும் தனது தொழில் நிறுவனங்களைக் கவனித்துக் கொண்டு சென்னையில் இருக்கிறார் ராவ். இந்த நிலையில், ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருக்கும் சிக்கலை உண்டாக்கும் சட்ட நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொண்டால் தேவையில்லாமல் தனக்கும் தொல்லை வரலாம் என நினைக்கிறாராம் ராவ். அப்படி ஏதும் சிக்கல் வந்துவிடாமல் இருக்க தனது நிலையை எடுத்துச் சொல்வதற்காக முதல்வர் ஸ்டாலினைச் சந்திக்க நேரம் கேட்டாராம் ராவ். ஆனால், மூன்று முறை அவருக்கான அப்பாயின்மென்ட் மறுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

சென்னையில் தொழில் ஸ்தாபனங்கள் நடத்துவதால் தமிழக அரசுடன் இணக்கமாக இருக்க நினைக்கிறாராம் ராவ். அதேசமயம், அவரை திமுகவுக்குள் இழுத்துப்போட சிலர் முயற்சிக்கிறார்களாம். ஆனால், அதை விரும்பாத ராவ், முதல்வரைச் சந்தித்து தன்னிலை விளக்கம் கொடுக்க நினைக்கிறாராம். மூன்று முறை கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் அடுத்த முயற்சியாக, அண்ணாநகர் திமுக எம்எல்ஏ-வான மோகன் மூலமாக முதல்வரைச் சந்திக்கும் முயற்சியில் ராவ் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in