யாத்திரைக்குப் பின்னால் இருக்கும் ராகுல் கணக்கு!

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியினரை மட்டும் நம்பிக் கொண்டிருந்தால் கரைசேர முடியாது என்பதை (தாமதமாக!) உணர்ந்திருக்கும் ராகுல் காந்தி, பொதுவெளியில் மக்கள் சக்தியைத் திரட்டும் வல்லமை கொண்ட தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்களுடன் கைகோக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார். இதற்காகவே மத்திய பாஜக அரசுக்கு எதிராக ‘இந்திய ஒருங்கிணைப்புப் பயணம்’ என்ற யாத்திரையை செப்டம்பர் 7-ல் கன்னியாகுமரியில் இருந்து தொடங்குகிறார் ராகுல்.

இந்தப் பயணம் குறித்து கலந்தாலோசிக்க இந்திய அளவில் 150 அமைப்புகள் சார்ந்த பிரநிதிகளை கடந்த 22-ம் தேதி அழைத்துப் பேசியிருக்கிறார் ராகுல். இதில், அணு உலை எதிர்ப்பு இயக்கத்தின் சுப.உதயகுமார் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டார்கள். இவர்களில் பெரும்பகுதியினர், தங்கள் ஆட்சியில் நடந்த விரும்பத் தகாத சில நிகழ்வுகளுக்காக பொதுமக்களிடம் காங்கிரஸ் வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார்களாம். இதை அமைதியாகக் கேட்டுக்கொண்ட ராகுல், ”நீங்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவைத் தரவேண்டும். நாமெல்லாம் ஒன்றாக நின்று எப்படியாவது பாஜக அரசை வீழ்த்த வேண்டும்” என்று சொன்னதுடன், தேசத்துக்காக தனது பாட்டி, அப்பாவை இழந்ததை எல்லாம் எடுத்துச் சொல்லி உருகினாராம். பொதுவெளியில் அரசியல் சார்பற்று இயங்கும் இந்த அமைப்புகள் எல்லாம் தேர்தல் நேரத்தில் தங்களுக்கு பிரச்சாரகர் களாக இருப்பார்கள் என ராகுல் கணிக்கிறாராம். ஆனால், பாஜகவை எதிர்க்கும் இந்த அமைப்பினரில் பலரும் காங்கிரஸையும் விமர்சிப்பவர்கள் என்பதும் ராகுல் கவனிக்க வேண்டிய விஷயம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in