தாமரை மேல் விழுந்த சகதியாம் சரவணன்!

சரவணன் பாஜகவில் இணைந்தபோது...
சரவணன் பாஜகவில் இணைந்தபோது...

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவம் இன்னமும் மீடியா விவாதங்களில் பிரதானமாகப் பேசப்படுகிறது. இந்த சம்பவத்துக்கு முன்பாகவே திமுக தரப்பிடம் ரகசியமாகப் பேசிக்கொண்டிருந்த பாஜகவின் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன், இந்தச் சம்பவத்தை வைத்து, பாஜகவை விட்டு விலகப்போவதாக அறிவித்தார். ஆனால், அதற்கு வாய்ப்பளிக்காமல் அண்ணாமலையே அவரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கினார். இதனையடுத்து, பாஜகவின் இந்துத்துவா அரசியல் குறித்து தனது விமர்சனங்களை வீரமாக எடுத்துவைத்து வருகிறார் சரவணன். பதிலுக்கு பாஜகவினரும், ‘ஆல் பார்ட்டி மெம்பர்’ என்றெல்லாம் தங்களால் முடிந்தளவுக்கு சரவணனின் காலத்திற்கேற்ற கட்சி மாறி அரசியலைக் காய்ச்சி எடுத்து வருகிறார்கள்.

அந்த போஸ்டர்...
அந்த போஸ்டர்...

இந்நிலையில், பாஜகவின் மதுரை மாநகர் மாவட்ட பாஜக செயலாளரான ஜனா ஸ்ரீ முருகன், ‘தாமரை மேல் விழுந்த சகதி (குப்பை) அகற்றப்பட்டது. இனி தாமரை தன்னிறைவோடு மலரும் மதுரையில்...’ என்று போஸ்டர் ஒட்டி சரவணனை மீண்டும் வம்புக்கு இழுத்திருக்கிறார். இந்தப் போஸ்டரில் முருகனின் மனைவியும் பாஜகவின் மதுரை மாமன்ற உறுப்பினருமான பூமாவும், முருகனுடன் சேர்ந்து பளிச்சென சிரிக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in