சுப்புலட்சுமியால் மனம்மாறிய பூங்கோதை அருணா!

பூங்கோதை
பூங்கோதை

இம்முறை திமுகவில் ஆறேழு மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் இருக்கும் என்று செய்திகள் கசியும் நிலையில், தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் பொ.சிவபத்மநாபனை எப்படியும் மாற்றியே தீருவது என்று அணி சேர்க்கிறாராம் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா. சட்டப் பேரவைத் தேர்தலில், தான் தோற்றுப்போனதற்கு சிவபத்மநாபனும் முக்கிய காரணம் என்று கங்கணம் கட்டும் பூங்கோதை, யாரையும் சிபாரிசு செய்யாமல் தானே இம்முறை மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் முடிவில் இருந்தாராம். ஆனால், திடீரென சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுகவிலிருந்து விலகியது பூங்கோதையின் முடிவை மாற்றிவிட்டதாம். சுப்புலட்சுமி வகித்துவந்த துணைப் பொதுச்செயலாளர் பதவி தனக்குக் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்பதாலேயே மாவட்டச் செயலாளர் பதவிக்கான போட்டியிலிருந்து பின்வாங்கிக் கொண்டாராம். என்றபோதும் சிவபத்மநாபன் மாவட்டச் செயலாளராகத் தொடரக்கூடாது என்பதில் தீர்மானமாக இருக்கும் பூங்கோதை, அந்தப் பதவிக்கு முன்னாள் மாவட்டச் செயலாளரான துரைராஜின் பெயரை கட்சித் தலைமைக்குப் பரிந்துரைத்திருக்கிறாராம். இந்த நிலையில், கடந்த 20-ம் தேதி சிவபத்மநாபன் கோஷ்டியும், 21-ம் தேதி பூங்கோதை கோஷ்டியும் தனித்தனியாக அறிவாலயம் வந்து மாவட்டச் செயலாளர் பதவிக்காக மனுக்கொடுத்துவிட்டு சென்னையில் முகாம் போட்டிருக்கிறதாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in