அதிரடி ஆரிப்... ஆனந்தத் துள்ளலில் பினராயி!

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

கேரளத்தில் முதல்வர் பினராயி விஜயனுக்கும், ஆளுநர் ஆரிப் முகமதுகானுக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் பினராயி உற்சாகம் குறையாமல் இருக்கிறார். ஆளுநரின் அதிரடி அரசியலால் ராகுலின் கேரள நடைபயணம், தோழர்களுக்கு எதிராக ஸ்வப்னா சுரேஷ் கிளப்பிய பூகம்பம் எல்லாமே சத்தமில்லாமல் ஓய்ந்துவிட்டது. கூடுதலாக, பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் ஆளுநர் விஷயத்தில் தோழர்களுக்குத் தோள் கொடுக்கிறது. அதிலும் எதிர்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், “ஆளுநர் ஒன்றும் கேள்வி கேட்கமுடியாத கடவுள் அல்ல. அமைச்சர்கள் ஆளுநரை விமர்சிக்கும் முன்பே விமர்சித்தவர்கள் நாங்கள்” என மார்க்சிஸ்ட்களுக்கு ஆதரவாக மார்தட்டுகிறார். இதையெல்லாம் பார்த்துவிட்டு உள்ளுக்குள் உற்சாகத் துள்ளலில் இருக்கிறாராம் பினராயி விஜயன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in