அடக்கி வாசிக்கும் அசோக்குமார் எம்எல்ஏ!

அசோக்குமார்
அசோக்குமார்

மொய்விருந்து நடத்தி ஒரே நாளில் ஒபாமா ரேஞ்சுக்கு பிரபலமானவர் பேராவூரணி திமுக எல்எல்ஏ-வான அசோக்குமார். மொய்விருந்து வசூல் சர்ச்சை விஸ்வரூபமெடுத்து எதிர்க்கட்சிகள் எல்லாம் வறுத்தெடுத்ததால் வாடிப்போனார் மனிதர். போதாக்குறைக்கு, விவகாரம் திமுக தலைமை வரைக்கும் போனதால் அங்கிருந்து ஏதும் ‘அர்ச்சனை’ நடந்திருக்கும் போலிருக்கிறது. அதனால் ஆள் இருக்கும் இடமே தெரியாமல் பம்மிவிட்டார். இப்போது மாவட்டத்தில் நடக்கும் முக்கியமான நிகழ்ச்சிகளில்கூட கலந்துகொள்ளாமல் கூடுமானவரை தவிர்த்து வருகிறாராம். முன்பெல்லாம் தொகுதி பக்கம் அடிக்கடி தலைகாட்டும் அசோக்குமார், இப்போது அதையும் நிறுத்தி விட்டாராம். “என்னதான் ஆச்சு எங்க ஊரு எம்எல்ஏ-வுக்கு” என விசாரப்பட்டு நிற்கிறார்கள் பேராவூரணி பொதுமக்கள். அசோக்குமார் ஆதரவாளர்களோ, “இன்னிக்கு வாங்கினா நாளைக்கு வட்டியும் முதலுமா திரும்பச் செய்யப் போறாரு. இதப் போயி இம்புட்டுப் பெருசா பேசணுமாக்கும்... மொய்விருந்து நடத்துனது ஒரு குத்தமாய்யா..?” என ஆதங்கப்படுகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in