அப்பாவுக்காக அக்கறைப்படும் ஜெயபிரதீப்!

ஜெயபிரதீப்
ஜெயபிரதீப்

தென் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், செல்லூர் ராஜு உள்ளிட்டோர் ஓபிஎஸ் பக்கம் நிற்காமல் ஈபிஎஸ் பக்கம் போனதில் முக்குலத்தோர் கடும் அதிருபதியில் இருக்கிறார்கள். இதன் தாக்கம் அக்டோபர் 30 தேவர் ஜெயந்தி நாளில் தெரியும் என்கிறார்கள். இதனிடையே, ஈபிஎஸ் பக்கம் தேக்கிவைக்கப்பட்டுள்ள முக்குலத்தோர் சமூகத்து தலைகளை ஓபிஎஸ்சின் மகன்களான ரவீந்திரநாத் குமாரும், ஜெயபிரதீப்பும் ரகசியமாகத் தொடர்புகொண்டு பேசிவருகிறார்களாம். அந்த வகையில், இதுவரை ஆன்மிகப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துவந்த ஜெயபிரதீப் இப்போது அப்பாவுக்கான அரசியல் நகர்வுகளில் தனது அண்ணன் ரவீந்திரநாத்தை விட தீவிரமாக இருக்கிறாராம். ஈபிஎஸ் பக்கம் இருக்கும் அதிருப்தியாளர்களை இழுக்கும் விஷயத்திலும் அதிக முனைப்புக் காட்டும் பிரதீப், சமூக ஊடகங்களில் அப்பாவுக்கு ஆதரவாக இயங்கும் நபர்களுக்கு தனது செலவில் லேப்டாப், மொபைல் போன் என தளவாடச் சாமான்களையும் தாராளமாக வாங்கிக் கொடுத்துக் கவனிக்கிறாராம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in