பிள்ளை வந்துவிட்டார்... அடுத்து, பிதாவும் வந்துவிடுவார்!

வேல ராமமூர்த்தி
வேல ராமமூர்த்தி

அதிமுகவில் பெரும்பாலான நிர்வாகிகள் ஈபிஎஸ் பக்கம் இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் காரை ஓட்டிக்கொண்டிருக்கிறார் ஓபிஎஸ். அப்படியே போகிற போக்கில் பொழுதுபோக்கு போல, ஈபிஎஸ் பக்கம் இருக்கும் நிர்வாகிகளை நீக்கிவிட்டு தனது விசுவாசிகளை அந்தப் பொறுப்புகளில் நியமித்தும் வருகிறார் ஓபிஎஸ்.

ஓபிஎஸ்ஸுடன் ராஜமோகன்
ஓபிஎஸ்ஸுடன் ராஜமோகன்

அந்த வகையில், அதிமுக மாநில இளைஞரணிச் செயலாளராக பொறியாளர் ராஜ்மோகனை அண்மையில் அறிவித்திருக்கிறார் ஓபிஎஸ். இவர் எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தியின் புதல்வர். மகனை இந்தப் பொறுப்பில் நியமித்தமைக்கு வேல ராமமூர்த்தியே தனது வலைதளப் பக்கத்தில் ஓபிஎஸ்ஸுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். ”மகன் வதுவிட்டார்... அடுத்ததாக அப்பா வேல ராமமூர்த்தியையும் தன் பக்கம் தந்திரமாக இழுத்து விடுவார் ஓபிஎஸ்” என்கிறார்கள் தர்மயுத்த நாயகனின் விசுவாசிகள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in