ஓபிஎஸ் கரத்தை வலுப்படுத்தும் தினகரன்!

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் ஓபிஎஸ் கரத்தை வலுப்படுத்தும் விவகாரத்தில் டி.டி.வி.தினகரன் ரொம்பவே மெனக்கிடுகிறாராம். சில விவகாரங்களில் தன்னால் முடிந்தளவுக்கு நிதி உதவியும் செய்கிறாராம். உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ-வான ஐயப்பன் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரால் அரசியலில் முன்னுக்குக் கொண்டுவரப்பட்டவர்.

ஐயப்பன்
ஐயப்பன்

தற்போது ஈபிஎஸ் அணியில் தீவிரமாக இயங்கும் உதயகுமார், “ஓபிஎஸ்சை விட்டேனா பார்” என முழங்கிக் கொண்டிருக்கிறார். அப்படியிருக்கையில், அவரது ஆதரவாளரான ஐயப்பன், தனது ஆதரவாளர்களுடன் சென்று ஓபிஎஸ்சை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார். ஐயப்பனை இப்படி இடம்பெயர வைத்ததே தினகரன்தானாம். ஐயப்பன் ஓபிஎஸ்சை சந்தித்த அதே நாளில் தான் “சின்னம்மாவை நானே நேரில் சென்று சந்திப்பேன்” என்று ஓபிஎஸ் அதிரடி கிளப்பினார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in