எங்களுக்குன்னு ஒரு அமைச்சர் இருந்தா..!

எங்களுக்குன்னு ஒரு அமைச்சர் இருந்தா..!

சில மாவட்டங்களுக்கு இரண்டு அமைச்சர்கள் கூட இருக்கிறார்கள். ஆனால், மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களால் பாதிக்கப்படும் டெல்டா மாவட்டங்களுக்கு தற்போது ஒரு அமைச்சர்கூட இல்லை. அமைச்சர்கள் மெய்யநாதனும், மகேஷ் பொய்யாமொழியும் டெல்டா மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், ‘சன் ஆஃப் சாயில்’ இல்லை என்பதால் அவர்களால் மக்களோடு அவ்வளவாக ஒன்றமுடியவில்லை.

மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்கள் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக இல்லையே என்ற குறை இப்போதுதான் மக்களுக்குத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. பொறுப்பு அமைச்சர்களில் ஒருவரான மகேஷ் பொய்யாமொழி அரசுமுறை வெளிநாட்டுப் பயணத்தில் இருக்கிறார். இன்னொருவரான மெய்யநாதன் முழுப்பொறுப்பெடுத்து வெள்ள நிவாரணப் பணிகளைக் கவனித்து வருகிறார். ஆனாலும், “அமைச்சர்கள் எங்கள் மாவட்டத்தினராக இருந்தால் அவர்களுக்கு அனைத்துப் பகுதிகளையும் நன்றாகத் தெரியும்; மீட்புப் பணிகளைக் முடுக்கிவிடுவதும் எளிதாக இருக்கும். விவசாயிகள் தங்களது பிரச்சினைகளை உரிமையோடு எடுத்துச் சொல்லவும் வசதியாக இருக்குமே” என ஆதங்கப்படுகிறார்கள் டெல்டாவாசிகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in