ஓபிஎஸ் அணியின் அடுத்த வரவு பொன்னையன்?

பொன்னையன்
பொன்னையன்

மைத்ரேயன் வருகையால் உற்சாகமடைந்திருக்கும் ஓபிஎஸ் டீம், அதே உற்சாகத்துடன் இன்னும் சில மாவட்ட செயலாளர்களிடமும் ‘பக்குவமாக’ப் பேசிக் கொண்டிருக்கிறதாம். இந்தப் பொறுப்பை வைத்திலிங்கம் வசம் ஒப்படைத்திருக்கிறாராம் ஓபிஎஸ். மாவட்ட செயலாளர்களுக்கு ஏதாவது எதிர்பார்ப்புகள் இருந்தால் அதையும் சரிசெய்துவிடலாம் என ஓபிஎஸ்ஸின் பிள்ளைகள் இருவரும் வைத்திலிங்கத்துக்கு வைட்டமின் கொடுத்திருக் கிறார்களாம். அதனால், உற்சாகமாகவே பேச்சுவார்த்தை நடத்திவரும் வைத்தி, “பதினாறு மாவட்ட செயலாளர்கள் நம்ம பக்கம் வர்றதுக்கு தயாரா இருக்காங்கண்ணே” என்று ஓபிஎஸ்ஸிடம் உத்தரவாதம் அளித்திருக்கிறாராம். அத்துடன் அடுத்த பெருந்தலை வரவாக கூடிய விரைவில் முன்னாள் அமைச்சர் பொன்னையனும் ஓபிஎஸ்ஸைத் தேடிவரலாம் என சொல்லிக்கொண்டிருக்கிறது ஓபிஎஸ் டீம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in