பாஜகவுக்கு எதிராக பதுங்கிப் பாயும் மனோ தங்கராஜ்!

மனோ தங்கராஜ்
மனோ தங்கராஜ்

“தமிழ்நாட்டுக்குள்ள தான் குமரி மாவட்டமும் இருக்கு. ஆனா, இங்க மட்டும் பாஜக ஆட்சி நடக்கிற மாதிரி இருக்கு” என்று திமுகவினரே நொந்துகொள்கிறார்கள். மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் சமய மாநாடு நோட்டீஸில் லோக்கல் அமைச்சர் மனோ தங்கராஜின் பெயரையே போடவிடாமல் பிடிவாதம் காட்டி ஜெயித்தது பாஜக. அதோபோல், நாகர்கோவில் மாநகராட்சியால் புதுப்பித்துக் கட்டப்பட்ட கட்டிடத்திற்கு கருணாநிதியின் பெயரை வைக்க திமுக முயற்சித்தது. ஆனால், அங்கேயும் அதிகாரம் செலுத்தவந்த பாஜக, “பழையபடி அந்தக் கட்டிடத்துக்கு கலைவாணர் பெயரைத்தான் வைக்க வேண்டும்” என பிரச்சினையக் கிளப்பி அதையும் சாதித்தது.

இப்படியெல்லாம் இந்துக்களையும் இந்து அபிமானிகளையும் படை திரட்டும் பாஜகவின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக திமுகவும், மார்க்சிஸ்ட் கட்சியும் சேர்ந்து தோல்சீலை மாநாட்டை நடத்தின. இதன் மூலம், இந்து மதத்துக்குள் அன்றைய காலத்தில் நிலவிய சாதிய பாகுபாட்டையும் பேசி இருப்பது பாஜகவை கொந்தளிக்க வைத்துக்கொண்டிருக்கிறது.

இதைப் புரிந்துகொண்டு இந்த விஷயத்தில் இன்னும் வேகமாக செயல்பட திட்டமிடுகிறதாம் திமுக. எதிர்ப்புகளை எதிர்க்கொண்டு தோள்சீலை மாநாட்டை நடத்தி முடித்துவிட்ட நிலையில், தோல்சீலைப் போராட்டத்தின் 200-வது ஆண்டை கல்லூரிகளில் நிகழ்ச்சிகளாக நடத்த திட்டம்போட்டுக் கொடுத்திருக்கிறதாம் திமுக. இதன் மூலம் பாஜகவின் இந்துத்துவ அரசியலின் பின்னால் இருக்கும் பிரச்சினைகளை பிரதானப்படுத்த முடியும் என்பதால் இந்த விஷயத்தில் பதுங்கிப் பாயத் தயாராகி வருகிறாராம் மனோ தங்கராஜ்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in