சிகரெட் இல்லாத பாபா; பாமகவுக்கு பயமா?

சிகரெட் இல்லாத பாபா; பாமகவுக்கு பயமா?

ரஜினி நடித்த எத்தனையோ மெகா ஹிட் படங்கள் இருக்க ரஜினியின் மனதுக்கு நெருக்கமான ‘பாபா’ திரைப்படம் மறுவெளியீடு ஆகிறது. டிசம்பர் 10-ம் தேதி வெளியாகும் பாபா படத்தை மறுபடியும் கொண்டாட ரஜினி ரசிகர்கள் இப்போதே ஆயுத்தமாகிவிட்டார்கள்.

2002-ல் பாபா ரிலீஸான சமயத்தில் வெளியான போஸ்டரில் கையில் பாபா முத்திரையுடனும், வாயில் சிகரெட்டுடனும் போஸ் கொடுத்திருப்பார் ரஜினி. இதைப் பார்த்துவிட்டு இளைஞர்கள் சீரழிவதாக போராட்டத்தை முன்னெடுத்தது பாமக. ஒரு கட்டத்தில் ரஜினி ரசிகர்களுக்கும், பாமகவினருக்கும் இடையே மோதலே வெடித்தது. வட மாவட்டங்களில் பாபா படப்பெட்டியை பாமகவினர் கடத்திவைத்த களேபரங்களும் அரங்கேறின. இதெல்லாம் பழைய கதை!

மறுவெளியீடு போஸ்டர்
மறுவெளியீடு போஸ்டர்

இந்த நிலையில், பாபா மறுவெளியீட்டுக்காக தற்போது வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டரில் ரஜினியின் வாயில் இருந்த சிகரெட் மிஸ்ஸிங். ‘இது பாமக மீதான பயமா? அல்லது வயதுகூடி ரஜினிக்கு இருக்கும் பொறுப்பு, பொதுநலம் குறித்த புரிதலா?’ என நெட்டிசன்கள் பட்டிமன்றம் நடத்தாத குறையாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். கண்டன அறிக்கை வெளியிட்டு மீண்டும் ‘பாபா அரசியல்’ செய்வதற்கு பாமகவினருக்கும் இம்முறை வேலையில்லாமல் போய்விட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in