ராமலிங்கம்
ராமலிங்கம்

சிவனேனு அங்கேயே இருந்திருக்கலாமோ..!

திமுக உட்கட்சித் தேர்தலில் சிலருக்கு, கேட்டது கிடைத்திருக்கிறது. சிலருக்கு, கேட்காததும் கிடைத்திருக்கிறது. இன்னும் சிலருக்கு, உள்ளதும் போயிருக்கிறது. நாமக்கல் தொகுதி எம்எல்ஏ-வான பெ.ராமலிங்கம் இதில் மூன்றாவது ரகம். நாமக்கல் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளராக இருந்த ராமலிங்கம், மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்க பிரயாசைப்பட்டார். ஆனால், கிழக்கு மாவட்ட செயலாளரான ராஜேஸ்குமார் எம்பி, தலைமைக்கு மிக நெருக்கமாக இருப்பதால் அவரை மீறி அந்த இடத்துக்கு வரமுடியாது என நினைத்தவர், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு வேட்பு மனுவை தாக்கினார்.

ஆனால், ’இந்தாளு யாருய்யா... குறுக்கும் மறுக்குமா ஓடிக்கிட்டு’ என்று சொல்லாத குறையாக மேற்கு மாவட்டத்தில் இவரை யாருமே கண்டுகொள்ளவில்லையாம். அமைச்சர் செந்தில் பாலாஜி பரிந்துரைத்த  மதுரா செந்தில் என்பவரை மேற்கு மாவட்ட செயலாளராக அறிவித்துவிட்டது தலைமை. ஒரு பேச்சுக்காவது ராமலிங்கத்தை அழைத்துப் பேசி சமாதானம் சொல்லக்கூட கட்சியில் ஆளில்லையாம். ‘பேசாம மாவட்ட துணைச் செயலாளரா கிழக்கு மாவட்டத்துலயே இருந்திருக் கலாமோ...’ என்று நூடுல்ஸாகிக் கிடக்கிறாராம் ராமலிங்கம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in