மோடி பசும்பொன் வரவில்லை; வருவதாக வதந்தி பரப்பியதின் நோக்கம்?

மோடி
மோடி

இந்த ஆண்டு தேவர் குருபூஜைக்கு பிரதமர் மோடி பசும்பொன் வரவிருப்பதாக இரண்டு நாட்களாக செய்திகள் அலையடித்தன. ஆனால், “அப்படியெல்லாம் எந்தத் திட்டமும் இல்லை... பிரதமரை அனைத்து குருபூஜைக்கும் அழைத்து வர வேண்டும் என்ற ஆசைதான். ஆனால், இந்த ஆண்டு அதற்கான வாய்ப்பில்லை. அடுத்த ஆண்டு அவரை அழைத்து வருவோம்” என்று இன்று காலையில் வெளிநாட்டு பயணம் முடித்து சென்னை திரும்பிய அண்ணாமலை விமான நிலைய வாசலிலேயே போட்டுடைத்துவிட்டுப் போய்விட்டார்.

இந்த நிலையில், இந்தச் செய்தி யாரால் எங்கிருந்து கிளப்பப்பட்டது. இதனால் அவர்களுக்கு என்ன சாதகம் என்பது பற்றி எல்லாம் பாஜககாரர்கள் அண்ணாமலைக்கு புட்டுப் புட்டு வைத்துவிட்டார்களாம். பிரதமரின் பசும்பொன் வருகை குறித்த செய்தி முதன் முதலில் திமுக ஆதரவு சேனல் ஒன்றில் தான் ஃப்ளாஷ் நியூஸாக ஓடியதாம். அதைத்தான் மற்ற சேனல்கள் எடுத்துப் போட்டார்களாம். இதை அண்ணாமலையிடம் விவரித்த தமிழக பாஜகவினர், “பிரதமர் பசும்பொன் வருகிறார் என்ற செய்தி தேவரினத்து மக்கள் மத்தியில் பேசுபொருளானது. இரண்டு நாட்களாக தென் மாவட்டங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கி விட்டது. இந்த நிலையில், பிரதமர் பசும்பொன் வரவில்லை என்று சொன்னால் அது தென் மாவட்டங்களில் குறிப்பாக தேவரினத்து மக்கள் மத்தியில் பிரதமர் மீதும் பாஜக மீதும் தேவையற்ற அதிருப்தியை உண்டுபண்ணும். இந்தச் செய்தியை ஃப்ளாஷ் செய்தவர்களின் நோக்கமும் அதுதான். இதை நீங்கள் சும்மாவிடக் கூடாது” என்று சொல்லி இருக்கிறார்களாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in