எதுக்கும் ஆடிட்டர பாத்துருங்க அசோக்குமார்!

அசோக்குமார்
அசோக்குமார்

வெளியில் தெரியாமல் இருந்த பேராவூரணி திமுக எம்எல்ஏ-வான அசோக்குமார், மொய்விருந்து வைத்து 11 கோடி ரூபாய் வசூலித்து ஒரே நாளில் உலகப் பிரபலம் ஆனார். 100 ஆட்டுக் கிடாக்கள் வெட்டி ஆர்ப்பாட்டமாய் 15 ஆயிரம் பேருக்கு விருந்துவைத்தார் அசோக்குமார். மொய்விருந்து வசூலுக்காக மட்டும் 40 கவுன் டர்கள் அமைக்கப்பட்டு அதை பத்துக்கும் மேற்பட்ட செக்யூரிட்டி கேமராக்கள் கண்காணித்தன. எதிர்பார்த்தபடியே ஏகபோகமாக முடிந்துவிட்டது மொய்விருந்து. ஆனால், அசோக்குமாருக்கு சிக்கல் ஆரம்பித்துவிட்டது. “ஆளும் கட்சி எம்எல்ஏ இப்படி பிரம்மாண்ட மொய்விருந்து நடத்தலாமா?” என் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கின்றன. பாஜக தலைவர் அண்ணாமலையோ, “இது திமுகவின் விஞ்ஞானபூர்வ ஊழல் திறமை. இந்த மொய்விருந்தில் கறுப்புப் பணம் வெள்ளையாகி யுள்ளது. விஞ்ஞானபூர்வ வித்தைகள் காட்டுவதில் தலைமையையே விஞ்சியவர்கள் திமுகவினர்” என ஒட்டுமொத்த திமுகவையே வம்புக்கு இழுத்திருக்கிறார். ஆக, அசோக்குமார் எதற்கும் ஆடிட்டர பார்த்து கணக்கு வழக்கை பக்காவாய் வெச்சுக்கிறது அவருக்கும் நல்லது; திமுகவுக்கும் நல்லது!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in