அம்மன் அர்ஜுனனுக்கு அணை கட்டும் செந்தில் பாலாஜி!

அம்மன் அர்ஜுனன்
அம்மன் அர்ஜுனன்

திமுகவின் கோவை மண்டல தளபதியாக உருவெடுத்திருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜி, தனது அடுத்தடுத்த செயல் திட்டங்களால்  தலைமையையே திணறடித்து வருகிறார். சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் பெரும் தோல்வியைச் சந்தித்த திமுகவுக்கு உள்ளாட்சித் தேர்தலில் உச்சபட்ச வெற்றியைக் கொடுத்தார் செந்தில் பாலாஜி

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் கோவை வரும்போது அதிமுக எம்எல்ஏ ஒருவரை அரசுக்கு ஆதரவாகப் பேசவைத்து தங்கள் பக்கம் இழுக்க திட்டமிடுகிறாராம் பாலாஜி. இதற்காக அவர் குறிவைத்திருப்பது  கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ-வான அம்மன் அர்ஜுனன் தான் என்கிறார்கள்.

2016 தேர்தலில் கோவை தெற்கு எம்எல்ஏ-வாக இருந்த  அம்மன் அர்ஜுனன், கடந்த முறை அந்தத் தொகுதியை பாஜக  கேட்டு வாங்கிக் கொண்டதால், தனக்குச் சம்பந்தே இல்லாத கோவை வடக்கில் போட்டியிட்டார். அங்கும் அவருக்கு வெற்றிமுகம் கிட்டியது. அப்படிப்பட்ட செல்வாக்கான மனிதரை திமுக பக்கம் தள்ளிக்கொண்டுவர காரியமாற்றுகிறாராம் செந்தில் பாலாஜி.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின்  தீவிர விசுவாசியான அர்ஜுனனைத் தூக்குவதன்  மூலம் வேலுமணிக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும் என்பதும் செந்தில் பாலாஜியின் செயல்திட்டமாம்.  செப்படி வித்தைகளால் எதையும் சாதிக்கக்கூடியவர் தான் செந்தில் பாலாஜி. ஆனால், இவரின் ‘வித்தைக்கு’ அம்மன் அர்ஜுனன் மயங்குவாரா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in