பொன்முடிக்கு எதிராக புலம்பும் அதிகாரிகள்!

பொன்முடி
பொன்முடி

விழுப்புரம் நகராட்சிப் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட அமைச்சர் பொன்முடி இன்று வருவதாக இருந்தது. இதனால், பாதிக்கப்பட்ட பகுதிகளின் பட்டியல் சகிதம் அதிகாரிகள் ஏக அலர்ட்டாய் காத்திருந்தார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் செல்லும்போது ஏடாகூடமாக(!) ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக காவல் துறையினரும் எக்ஸ்ட்ரா ஃபோர்ஸுடன் காத்திருந்தார்களாம். ஆனால், கடைசிவரை அமைச்சர் அந்தப்பக்கம் எட்டிப் பார்க்கவில்லையாம்.

கடைசி நேரத்தில் அமைச்சர் பொன்முடி வேறு பக்கம் வண்டியைத் திருப்பிவிட்டதால், காத்துக்கிடந்த அதிகாரிகள் கரித்துக்கொட்டிவிட்டு காரைக் கிளப்பினார்களாம். மக்கள் அதற்கும் மேல். இன்று மட்டுமல்ல... இப்படி அடிக்கடி தனது பயணத் திட்டத்தை மாற்றிக்கொள்கிறாராம் பொன்முடி. இதனால் தேவையியின்றி காத்துக்கிடந்து கால விரையம் ஏற்படுவதாக விழுப்புரம் மாவட்ட அதிகாரிகள் தங்களுக்குள் ளேயே ஒருவருக்கொருவர் சத்தமில்லாமல் புலம்பிக் கொள்கிறார்களாம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in