காணிக்கைகள் மாயம்; கண்டுகொள்வாரா அமைச்சர்?

அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபுஇந்து சமய அறநிலையத்துறை கண்டுக்கொள்ளாத அமைச்சர்..!

பழனி தண்டாயுதபாணிக்கு சென்னையைச் சேர்ந்த தொழிலாதிபர் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் 1.5 அடி நீளத்தில் தங்கவேல் ஒன்றை காணிக்கையாக அளித்தராம். ஆனால், அண்மையில் மீண்டும் பழனி கோயிலுக்குச் சென்ற அவர், நன்கொடையாளர்கள் பட்டியலில் வேல் குறித்த தகவல் இடம்பெறாததைக் கண்டு அதிர்ந்து போனாராம். இது தொடர்பாக கோயில் நிர்வாகத்தினர் உரிய பதில் தராததால் விஷயத்தை போலீஸ் வரைக்கும் கொண்டு போய்விட்டாராம். ஆனால், அங்கேயும் அவருக்கு தீர்வு கிடைக்காததால் விஷயத்தை முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகாராக அனுப்பிவிட்டு காத்திருக்கிறாராம்.

அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில்களில் இப்படி காணிக்கைகள் காணாமல் போவது தொடர்கதையாகி வருகிறதாம். அண்மையில்கூட, திருச்செந்தூர் முருகனுக்கு பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த மாடுகளைக் காணவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பகீர் கிளப்பியது நினைவிருக்கலாம்.

காணிக்கைகள் மாயமாவது குறித்து அறநிலையத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு புகார் அளித்தால், எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பது போல் அலட்சியம் காட்டுகிறார்களாம். சி.எம்.டி.ஏ. பொறுப்பு கூடுதலாக கைக்கு வந்ததும் அந்தத் துறையில் நடக்கும் விஷயங்களை ’கவனிக்கவே’ அமைச்சர் சேகர்பாபுவுக்கு நேரம் சரியாக இருக்கிறதாம். அதனால் அறநிலையத் துறை சம்பந்தப்பட்ட இது போன்ற புகார்கள் குறித்து அதிகாரிகளும் அதி மெத்தனமாகவே இருக்கிறார்களாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in