அதிமுகவினரா... ‘அன்பான’வர்களா? - அல்லாடும் அமைச்சர் நேரு!

கே.என்.நேரு
கே.என்.நேரு

“நான் எது செய்தாலும் பேசினாலும் அதற்கு ஒரு அர்த்தம் கற்பிச்சு அதை வாட்ஸ் - அப்ல வைரலாக்கிடுறாங்களே” என ஆதங்கப்படுகிறாராம் அமைச்சர் கே.என்.நேரு. அண்மையில் சென்னை மேயர் பிரியாவை, “வாம்மா... போம்மா” என்று அவர் அழைத்ததை அப்படித்தான் சமூக ஊடகங்களில் பரப்பினார்கள். அதற்கு பிரியா தரப்பிலிருந்தே விளக்க வீடியோ வெளியானதும் அந்தப் பிரச்சினை கொஞ்சம் அடங்கியது. பொதுவாகவே ஆண்களை, “வாய்யா... போய்யா” என்றும், பெண்களை, “வாம்மா... போம்மா” என்றும் அழைப்பது தான் நேருவுக்கு வழக்கம். அப்படித்தான் சென்னை மேயரையும் அழைத்தாராம். ஆனால், அதை ஒரு பெரிய விவாதமாக்கி விவகாரமாக்கிவிட்டார்கள்

இதேபோல், திருச்சி ஜீயபுரம் டிஎஸ்பி-யை புகழ்ந்து பேசுவதற்காக நேரு சில வார்த்தைகள் எக்ஸ்ட்ராவாகச் சொல்லப்போக, அதையும் அவருக்கு எதிராகத் திரித்துவிட்டார்களாம். இத்தனை நாளும் தனக்கு எதிராக அதிமுக ஐடி விங்க் ஆட்கள் தான் இப்படி சமூகவலைதள போரை தூண்டிவிடுவதாக நினைத்துக் கொண்டிருந்த நேருவுக்கு, தற்போது சொந்தக் கட்சிக்குள் இருக்கும் ‘அன்பான’ சிலர் மீதும் சந்தேகம் வலுத்துவருகிறதாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in