அம்மா நினைவிட ஊழல்; அடக்கி வாசிப்பது ஏன் திமுக?

எ.வ.வேலு
எ.வ.வேலு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டியதில் 17 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தரப்பில் பகீர் கிளப்பி இருக்கிறார்களாம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுமே இந்த விஷயத்தை துறையின் அமைச்சர் எ.வ.வேலுவின் கவனத்துக்குக் கொண்டு சென்றாராம் பொதுப்பணித் துறை தலைமை அதிகாரி. அப்படி இருந்தும் இந்த விஷயத்தில் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் அமைச்சர் கிடப்பில் போட்டு வைத்திருப்பது ஏன் என பொதுப்பணித் துறைக்குள்ளேயே சிலர் பொருமுகிறார்களாம்.

எந்த அதிகாரி ஊழல் கோப்புகளில் கையெழுத்திட மறுத்து அமைச்சரின் கவனத்துக்கு விஷயத்தைக் கொண்டு சென்றாரோ அந்த அதிகாரியை கடந்த மாதம் அங்கிருந்து புலம்பெயர்த்து விட்டார்களாம். இதையெல்லாம் மோப்பம் பிடித்துவிட்ட ஓபிஎஸ் வகையறாக்கள், அம்மா நினைவிடம் சம்பந்தமான முறைகேடு விஷயங்களை தங்களுக்கு வேண்டிய அதிகாரிகள் மூலம் ஆதாரத்துடன் கலெக்ட் பண்ணிவிட்டார்களாம். இதைவைத்துக் கொண்டு, “எங்களை திமுகவின் பி டீம் என்கிறார்கள். அவர்கள் செய்திருக்கும் ஊழலை விசாரிக்காமல் கிடப்பில் போடுகிறது திமுக அரசு. இதற்கு என்ன அர்த்தம் என்று அவர்கள் தான் சொல்ல வேண்டும்” என்று மீடியாக்களிடம் நியாயம் கேட்கப் போகிறார்களாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in