
திமுக அமைச்சர்களிலிலேயே மிகவும் சுறுசுறுப்பானவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. எல்லோரையும்விட அதிகம் சுறுசுறுப்பாக செயல்படுபவர். எந்த விஷயத்திலும் எதைப் பற்றியும் யோசிக்காமல் அரசின் நிலைப்பாட்டை எடுத்துச் சொல்பவர். அப்படிப்பட்டவர் அண்மைக்காலமாக எது குறித்தும் கருத்து தெரிவிக்காமல் அமைதியா காக்கிறார்.
அதற்கு காரணம், சீனியர் அமைச்சர்கள் சிலர் தங்கள் இஷ்டத்துக்கு எதையாவது பேசி அது அரசுக்கும், முதல்வருக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதுதானாம். அதன் விளைவாக அனைவருக்கும் தலைமையிலிருந்து கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப் பட்டுள்ளது. மற்றவர்களைவிட அன்பில் மகேஷிடம் கொஞ்சம் கூடுதல் உரிமையுடன் கேட்டுக்கொண்டாராம் முதல்வர். எதைப் பற்றியும் வெளிப்படையாக கருத்துச் சொல்லவேண்டாம் என்று அவர் அக்கறையோடு சொன்னதால் அதற்கேற்ப ரொம்பவே அடக்கிவாசிக்கிறாராம் அன்பில் மகேஷ்.