அதட்டிக் கேட்கும் அமைச்சர் மனோதங்கராஜ் மகன்!

அதட்டிக் கேட்கும் அமைச்சர் மனோதங்கராஜ் மகன்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ்காரர்களுக்கும் திமுகவினருக்கும் இடையில் பனிப்போர் முற்றிக்கொண்டே வருகிறது. குறிப்பாக, அமைச்சர் மனோதங்கராஜ் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறது காங்கிரஸ் வட்டாரம். இதனிடையே, அமைச்சரின் மகன் றிமோன் மனோதங்கராஜ், மாவட்டத்திலுள்ள வணிகர்கள் தொடங்கி தொழிலதிபர்கள் வரைக்கும் பலரிடமும் தொட்டதுக்கெல்லாம் வசூல் நோட்டை நீட்டுகிறாராம். ஏன்... எதுக்கு என்று யாராவது கேள்வி கேட்டால், “எங்க அப்பா உங்களுக்கு என்னவெல்லாம் செஞ்சு குடுத்துருக்காங்க. அதையெல்லாம் மறந்துட்டு, எதுக்குனு கேள்வி எல்லாம் கேட்குறீங்க” என்று அதிகார தோரணையில் கேட்கிறாராம். அலைபேசியில் இப்படி றிமோன் பேசும் ஆடியோ ஒன்றை கையில் வைத்திருக்கும் காங்கிரஸ் புள்ளிகள் சிலர், சமயம் பார்த்து இதை முதல்வர் காதில் ஒலிக்கவிட காத்துக்கொண்டி ருப்பதாகச் சொல்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in