பட்டியலில் இருக்கும் முதல் மூன்று அமைச்சர்கள்!

பட்டியலில் இருக்கும் முதல் மூன்று அமைச்சர்கள்!

சரிவர செயல்படாத அமைச்சர்கள் பட்டியலில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின் பெயரை முதல் நபராகக் கொடுத்திருக்கிறதாம் உளவுத்துறை. அடுத்ததாக மதிவேந்தன், சிவசங்கர் ஆகியோரின் பெயர்கள் வருகிறதாம். இந்த மூன்று பேருக்குமே சின்னவரின் ஆதரவு இருப்பதால் தப்பித்துக் கொண்டே வருகிறார்களாம். இருந்தாலும் இவர்களின் துறைகளையாவது மாற்றிக் கொடுக்கலாம் என நினைக்கிறாராம் முதல்வர். ஆனால், அமைச்சரவைக்குள் மாற்றம் இருந்தால் உதயநிதியையும் கட்டாயம் உள்ளே கொண்டுவர வேண்டும் என உள்ளுக்குள் இருந்தே அழுத்தம் வருகிறதாம். கனிமொழியை துணைப் பொதுச்செயலாளர் ஆக்கியதற்கே, ‘திமுகவில் குடும்ப அரசியல்’ என கும்மி கொட்டியவர்கள், உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் மேற்கொண்டும் சர்ச்சையாக்கிப் பேசுவார்கள் என்பதால் இப்போதைக்கு மகனுக்கு மகுடம் சூட்டவேண்டாம் என நினைக்கிறாராம் முதல்வர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in