அமித் ஷா அனுமதியுடன் அணிமாறிய மைத்ரேயன்?

அமித் ஷா அனுமதியுடன் அணிமாறிய மைத்ரேயன்?

ஒற்றைத் தலைமை பிரச்சினை வெடித்த போது, அழைக்காமலேயே போய் ஈபிஎஸ்ஸை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தவர் மைத்ரேயன். அப்படிப்பட்டவர் திடீரென ஓபிஎஸ் பக்கம் சாய்ந்திருக்கிறார். இதுபற்றி நம்மிடம் பேசிய தேனி மாவட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள், “அண்மையில் டெல்லி சென்றிருந்த எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக தரப்பில் எதிர்பார்த்த ரெஸ்பான்ஸ் இல்லை. இந்த நிலையில், மைத்ரேயன் இந்தப் பக்கம் வந்திருக்கிறார் என்றால் சும்மா இல்லை. மைத்ரேயனைப் பொறுத்தவரை அதிமுக வேட்டி கட்டிய பாஜககாரராகத்தான் இன்னமும் இருக்கிறார். ஓபிஎஸ்ஸுக்கு டெல்லியில் நடக்க வேண்டிய பாஜக தலைவர்களுடனான சந்திப்புகளை சாத்தியப்படுத்திக் கொடுத்தவரும் அவர்தான். அவரை நாங்கள் தமிழ் பேசும் அமித் ஷாவாகத்தான் பார்க்கிறோம். அப்படிப்பட்டவர் அமித் ஷா சிக்னல் கொடுத்ததாலேயே எங்கள் பக்கம் வந்திருக்கிறார். இன்னும் போகப் போகப் பாருங்கள் என்ன நடக்கிறதென்று” என்று பொடிவைத்துப் பேசுகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in