செந்தில்பாலாஜிக்கே செக் வைக்கும் மகேந்திரன்!

மகேந்திரன்
மகேந்திரன்

கோவை மாவட்டத்தை அதிமுக கோட்டை கணக்காக வைத்திருக்கும் எஸ்.பி.வேலுமணிக்கு நிகராக திமுகவுக்கும் அங்கே பலம் திரட்ட செந்தில்பாலாஜியை பொறுப்பு அமைச்சராக அனுப்பிவைத்தார் ஸ்டாலின். தனக்குக் கொடுத்த வேலையை தரமாகவே செய்துவரும் செந்தில்பாலாஜி, உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் பெருவாரியான இடங்களில் உதயசூரியனை உதிக்கவைத்தார். அடுத்ததாக, உட்கட்சித் தேர்தலில் உள்குத்து திமுகவினரை எல்லாம் ஊருக்கு அனுப்பிவிட்டு அந்த இடங்களில் எல்லாம் தனது ஆதரவாளர்களை அமரவைத்து வருகிறார். இப்படி பலருக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கும் செந்தில்பாலாஜிக்கே மக்கள் நீதி மய்யத்தின் வரவான டாக்டர் மகேந்திரன் டஃப் ஃபைட் கொடுக்கிறாராம். உள்ளாட்சி தேர்தலிலேயே செந்தில்பாலாஜிக்கு ‘வைத்தியம்’ பார்த்த மகேந்திரன், தற்போது உட்கட்சித் தேர்தலிலும் தனது விசுவாசிகளை ஜெயிக்கவைத்து பவர் காட்டுகிறாராம். திமுக எம்பி-யான தமிழச்சி தங்கபாண்டியன் வீட்டு சம்பந்தி என்ற டைட்டிலுடன் தேவைப்படும் இடங்களில் உதயநிதியின் பெயரையும் எடுத்துவிடுவதால் மகேந்திரனை சமாளிக்க வழிதெரியாமல் இருக்கிறாராம் செந்தில் பாலாஜி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in