பி.டி.ஆரை வீழ்த்தி பதவியைத் தக்கவைக்கிறார் தளபதி!

கோ.தளபதி
கோ.தளபதி

திருத்தியமைக்கப்பட்ட மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கு தற்போதைய தெற்கு மாவட்ட செயலாளர் கோ.தளபதியும் மாநில மாணவரணி துணை அமைப்பாளர் அதலை செந்தில்குமாரும் கடும் போட்டியில் இருந்தார்கள். இதில், செந்தில்குமார் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் தயாரிப்பாம். சீனியர் என்ற முறையில் தளபதிக்கு சேகர் பாபு, எ.வ.வேலு என 5 அமைச்சர்கள் பேசும் மொழி அடிப்படையில் வெயிட்டாக சிபாரிசு செய்தார்களாம். இரண்டு தரப்பையும் அழைத்து சமாதானம் பேசிய தலைமைக் கழக சீனியர்கள், “எஃப்.எம் (நிதியமைச்சர்) உங்க ஊர்ல தானே இருக்காரு. அவரை நேர்ல போய் பார்த்துப் பேசி பிரச்சினையை சுமூகமா முடிச்சுக்கலாம்ல. இதுல உங்களுக்கு என்ன சங்கடம்?” என்று தளபதியைக் கேட்டார்களாம். அதற்கு ரொம்பவே கூலாக ரியாக்ட் செய்த தளபதி, “நீங்க அவரை எஃப்.எம்னு சொல்றீங்க. ஆனா, அவரு சி.எம் கனவுலல இருக்காரு. எனக்கு சி.எம்னா அது தலைவர் குடும்பம் தான். அதனால அவரை எல்லாம் நான் போய் பார்க்கமாட்டேன். அப்படி அவரப் போய் பார்த்து பதவி வாங்கணும்கிற கட்டாயமும் எனக்கு இல்லை” என்றாராம். இதைக் கேட்டு பதிலேதும் சொல்லமுடியாமல் வாயடைத்துப் போனதாம் சீனியர்ஸ் வட்டம்.

பி.டி.ஆர்.பழனி
வேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனி வேல் தியாகராஜன்

கடைசியாக நமக்குக் கிடைத்த தகவல்படி தளபதியே மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளராக வரவாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இது உறுதியானால் மதுரை திமுகவில் பி.டி.ஆர். மகனுக்கு இனி இறங்குமுகம் தான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in