மீண்டும் திமுகவில் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்?

கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

வழக்கமாக திமுக சட்டதிட்டத்தின்படி ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கும் முன்பாக அதுகுறித்து விளக்கம் கேட்டு அவருக்கு சோகாஸ் நோட்டீஸ் அனுப்புவார்கள். அதற்கு அந்தநபர் தரும் பதிலில் திருப்தி இல்லை என்றால்தான் அவரை கட்சியிலிருந்தோ கட்சிப் பொறுப்பிலிருந்தோ நீக்குவார்கள். ஆனால், அண்மையில் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் செய்தித் தொடர்பு செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் விஷயத்தில் இந்த நடைமுறை எதுவும் பின்பற்றப்படாமல் அதிரடியாக, எடுத்ததுமே அவரை கட்சியைவிட்டு நீக்கிவிட்டார்கள். காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் குறித்தும் வைகோவின் மகன் துரை வைகோ குறித்தும் ராதாகிருஷ்ணன் பேசிய சில கருத்துகள் தான் அவரது நீக்கத்துக்குக் காரணம் என வெளியில் செய்திபரப்பப்படுகிறது. ஆனாலும் தனது நீக்கம் குறித்து பொதுவெளியில் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் இருக்கிறார் ராதாகிருஷ்ணன்.

இந்த நிலையில், “எந்தச் சர்ச்சையிலும் சிக்காத சீனியரான ராதாகிருஷ்ணனை கட்சியைவிட்டு நீக்கி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாம். கட்சியில் இருந்த போதும் கட்சியைவிட்டு விலக்கிய பிறகும் அவர் திமுகவை விமர்சித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை” என சீனியர் அமைச்சர்கள் சிலர் ஸ்டாலினிடம் பேசினார்களாம். அவரை நீக்கி அறிக்கை கொடுத்த பொதுச்செயலாளர் துரைமுருகனும் ராதாகிருஷ்ணனுக்காக ஸ்டாலினிடம் பரிந்து பேசியதாகச் சொல்கிறார்கள். இதையெல்லாம் நமக்குச் சொன்னவர்கள், “கே.எஸ்.ராதாகிருஷ்ணனை மீண்டும் திமுகவில் சேர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கு” என்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in