ஓட்டு அந்தப் பக்கம்... ஒப்பீனியன் இந்தப் பக்கம்!

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கான தேர்தல் இந்தியா முழுவதும் விறுவிறுப்பாக நடந்து முடிந்திருக்கிறது. மல்லிகார்ஜுன கார்கேவுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்ற மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்களில் 16 பேர் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் கடந்த 15-ம் தேதி, காரைக்குடியில் உள்ள தனது அலுவலகத்துக்கு வரைத்துப் பேசினாராம் கார்த்தி சிதம்பரம். அப்போது, “நீங்கள் அனைவரும் சசிதரூருக்குத்தான் தவறாமல் வாக்களிக்க வேண்டும். அவரைத்தான் நாம் ஆதரிக்கிறோம்” என்று கண்டிஷனாகச் சொன்னாராம். அதேசமயம், இந்தக் கூட்டம் முடிந்து வெளியே வந்த கார்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், “என்னுடைய ஆதரவு சசிதரூக்குத்தான். 19-ம் தேதி வாக்கு எண்ணும் போது பலருக்கும் இன்ப அதிர்ச்சி கார்த்தி ருக்கிறது. அதேசமயம், நேரு குடும்பத்தை ஒதுக்கிவிட்டு காங்கிரஸ் இல்லை. யார் தலைவராக வந்தாலும் நேரு குடும்பத்தின் வழிகாட்டல்படிதான் கட்சி செயல்படும். காங்கிரஸ் கட்சியில் இருக்கும் அனைவருமே மானசீக தலைவராக ராகுல் காந்தியைத்தான் நினைக்கிறார்கள்” என்று ஒரேபோடாய் போட்டாராம். இதைக்கேட்டு வாயடைத்து நின்ற பொதுக்குழு உறுப்பினர்கள், “என்னங்கடா இது... இவரு உள்ள ஒண்ணு பேசுறாரு... வெளியில வந்து இன்னொண்ணு பேசுறாரு” என்று புலம்பிக் கொண்டே போனார்களாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in