சுந்தரைச் சுற்றி சுற்றமும் நட்பும்!

மகாலட்சுமியுடன் சுந்தர் மற்றும் எழிலரசன்...
மகாலட்சுமியுடன் சுந்தர் மற்றும் எழிலரசன்...

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் உத்திரமேரூர் தொகுதி எம்எல்ஏ-வான சுந்தர். இவருக்கு எதிரான சூத்ராதாரிகள் சொந்த மாவட்டத்துக்குள்ளேயே பலர் இருக்கிறார்கள். இவர்கள் அடிக்கடி சுந்தருக்குக் குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். இவர்களில் சிலருக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசனின் ஆதரவும் உண்டு. காஞ்சிபுரம் மேயர் வேட்பாளராக மகாலட்சுமி யுவராஜை தலைமைக்கு சிபாரிசு செய்து நிறுத்தினார் சுந்தர். ஆனால் இவரது உட்கட்சி எதிரிகள் சிலர், மகாலட்சுமிக்கு எதிராக போட்டி வேட்பாளரை நிறுத்தினார்கள். ஆனாலும் மகாலட்சுமியே வாகை சூடினார்.

இந்த நிலையில், காஞ்சிபுரம் எம்எல்ஏ-வான எழிலரசன் இம்முறை தனது மாவட்ட செயலாளர் பதவிக்கு உதயநிதி மூலம் வேட்டு வைத்தாலும் வைத்துவிடுவாரோ என அஞ்சிக் கொண்டிருந்தாராம் சுந்தர். அதற்காக, உட்கட்சித் தேர்தலுக்கு முன்பே எழிலரசனின் ஆதரவாளர்களை திட்டம் வகுத்து ஓரங்கட்டினார். எஞ்சி இருந்தவர்களையும் தேர்தலில் பைபாஸ் செய்தார். மேயர் தேர்தலில் கட்சி வேட்பாளருக்கு எதிராக வேலை செய்தவர்களை எல்லாம் அதைச் சொல்லியே தந்திரமாக கழற்றிவிட்டார். இப்போது ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலும் சுந்தரின் திமுக சுற்றமும் நட்புமே முழுக்க முழுக்க வியாபித்திருக்கிறதாம். இதனால் தன்னை இனி யாரும் அசைக்க முடியாது என்ற தைரியத்தில் முன்னைவிட சுறுசுறுப்பாய் இருக்கிறாராம் சுந்தர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in