உதயகுமார் காலிலெல்லாம் விழவேண்டுமா கடம்பூராரே?

உதயகுமார் காலிலெல்லாம் விழவேண்டுமா கடம்பூராரே?

தென்மாவட்டங்களில் ஓபிஎஸ்சின் செல்வாக்கைச் சரிக்க முடிந்தமட்டும் முனைப்புக்காட்டுகிறார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். அதற்கேற்ப அவருக்கு கட்சிக்குள் அதிமுக்கியத்துவம் அளித்து தட்டுக்கொடுத்து வருகிறார் ஈபிஎஸ். கொங்கு மண்டலத்தில் தங்கமணி, வேலுமணி எப்படியோ அதுபோல தென் மண்டலத்தில் உதயகுமாரை உசுப்பிவிட்டு வருகிறார் ஈபிஎஸ். இதை நன்கு உணர்ந்திருக்கும் அதிமுகவினரும் இப்போது உதயகுமாரிடம் கூடுதல் மரியாதை காட்டத் தொடங்கி இருக்கிறார்கள்.

முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் பிறந்தநாள் விழாவுக்காக அண்மையில் கோவில்பட்டிக்கு வந்திருந்தார் ஆர்.பி.உதயகுமார். அந்த நிகழ்வின்போது கடம்பூராருக்கு உதயகுமார் சால்வை அணிவிக்க, உணர்ச்சிப் பெருக்கில் கடம்பூரார் படக்கென உதயகுமாரின் காலில் விழுந்தார்.

வயதில் சீனியரான கடம்பூர் ராஜூ ஜூனியரான உதயகுமாரின் காலில் விழுந்து ஆசிபெற்றதை கடம்பூராரின் ஆதரவாளர்களே ரசிக்கவில்லை. போதாக்குறைக்கு, கடம்பூரார் காலில் விழும் இந்தக் காட்சியை அதிமுகவின் அதிகாரபூர்வ செய்திச் சேனலான நியூஸ் ஜே-யில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி கடம்பூரார் வட்டத்தை மேலும் சங்கடப்பட வைத்தார்கள். இப்போது இந்த விவகாரத்தை வைத்துக் கிண்டலடிக்கும் ஓபிஎஸ் தரப்பினர். “எல்லாம் பதவிபடுத்தும் பாடு. ஈபிஎஸ்சுக்கு விசுவாசமாக இருப்பதைக்காட்டிக் கொள்வதற்காக கடம்பூர் ராஜு உதயகுமார் காலில் எல்லாம் விழவேண்டி இருக்கிறது என்ன செய்ய...” என்று சொல்லி நியூஸ் ஜே வீடியோவை தங்கள் பங்குக்கும் சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in