ஜோதிமணி கரூர் திரும்பிய காரணம்...

முருங்கை கண்காட்சியில் ஜோதிமணி...
முருங்கை கண்காட்சியில் ஜோதிமணி...

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் தொடக்கம் முதலே சுறுசுறுப்பாக இயங்குபவர் கரூர் காங்கிரஸ் எம்பி-யான ஜோதிமணி. ராகுலை விட்டு அணுவும் விலகாமல் இருந்த ஜோதிமணி, திடீரென யாத்திரைக்கு இரண்டு நாட்கள் லீவு போட்டுவிட்டு கரூருக்குப் பறந்துவந்துவிட்டார்.  

இதையடுத்து, ராகுல் யாத்திரையை வழி நடத்தும் பொறுப்பாளர்கள் பதறிப்போய் ஜோதிமணியிடம் விசாரித்தார்களாம். அதற்கு, “நான் ராகுல் யாத்திரையில் தொடர்ந்து பயணிப்பதை விரும்பாத சிலர், ‘கரூர் எம்பி-யைக் காணவில்லை’ என போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்கள். அவர்களுக்குப் பதில் சொல்லத்தான் கரூருக்குப் போகிறேன்” என்று சொல்லிவிட்டு வந்தாராம் ஜோதிமணி.

கரூருக்கு வந்த ஜோதிமணி, பொதுமக்களின் பார்வையில் படும்படியாக, முருங்கை கண்காட்சி உள்ளிட்ட  பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு மீண்டும் ராகுல் யாத்திரைக்குத் திரும்பிவிட்டார். தனது வேலைக்கு நடுவே, இந்தப் போஸ்டர்களை ஒட்டியது யார் என்ற விவரத்தையும் ரகசியமாக விசாரித்தாராம் ஜோதிமணி. “ஒட்டியது யாராக வேண்டு மானாலும் இருக்கலாம். ஆனால், இதன் பின்னணியில் உங்களுக்குப் பிடிக்காத காங்கிரஸ் ‘கை’களும் இருக்கு. ஏன்னா... நம்மாளுங்க சில பேருக்கு நீங்க ராகுலுக்கு நெருக்கமான வட்டத்துக்குள்ள போறது அவ்வளவா பிடிக்கல” என்று அவருக்கு துப்புக் கொடுத்தார்களாம் விசுவாசிகள். “இந்தத் தகவலையும் தலைமையின் கவனத்துக்கு நிச்சயம் கொண்டு செல்வேன்” என்று சொல்லிவிட்டுத்தான் கரூரைவிட்டுக் கிளம்பினாராம் ஜோதிமணி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in