அய்யோ அது நான் இல்லைங்க... கிலிபிடித்த கிள்ளியூர் எம்எல்ஏ!

ராஜேஷ்குமார்
ராஜேஷ்குமார்

கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ-வான ராஜேஷ்குமார் கிலிபிடித்துக் கிடக்கிறார். காரணம், அவரது பெயரில் டுபாக்கூர் பேர்வழிகள் போலியாக தொடங்கிய இன்ஸ்டாகிராம் பக்கம்! ராஜேஷ்குமார் பெயரில் விஷமிகள் தொடங்கிய அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் அவசரத் தேவையில் இருப்பதாகவும், உடனே இந்த கூகுள் பே எண்ணில் பணம் அனுப்ப முடியுமா என ராஜேஷ்குமாரே கேட்பது போல் மெசேஜ்களை பதிவிட்டுள்ளனர்.

இதைப் பார்த்துவிட்டு, எம்எல்ஏ-வுக்கு நெருக்கமான சிலர் “உங்களுக்கு அப்படி என்னங்க கஷ்டம்?” என அக்கறையுடன் போனில் அழைத்து விசாரித்தார்களாம். இதற்குப் பிறகு தான், தனது பெயரில் இப்படியொரு மோசடி விளையாட்டு அரங்கேறி இருப்பது ராஜேஷ்குமாருக்குத் தெரியவந்ததாம்.

பதறிப்போன ராஜேஷ்குமார், தன்னை அழைத்த நண்பர்களுக்கெல்லாம், “அய்யோ அது நானில்லைங்க... தயவுசெய்து பணத்தைப் போட்டுடாதீங்க” என தன்னிலை விளக்கம் கொடுத்ததுடன், முகநூலிலும் உண்மையைச் சொல்லி இருக்கிறார். இப்போது இந்த வில்லங்கத்தை சைபர் க்ரைம் போலீஸார் கவனத்துக்கும் எடுத்துச் சென்றிருக்கிறாராம் ராஜேஷ்குமார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in