‘சின்னவர்’ ஆகலாமா அப்பாவு? - சீண்டும் இன்பதுரை!

அப்பாவு
அப்பாவு

“ஆளுநருக்கு அந்தப் பதவிக்கான மாண்புகள் தெரியவில்லை" திமுகவினர் முழங்கிவரும் நிலையில், “சபாநயகர் அப்பாவு அந்தப் பதவிக்கான மாண்பைக் குலைக்கிறார்” என தாக்குகிறது அதிமுக.

ராதாபுரம் தொகுதியில் அப்பாவுவை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட இன்பதுரைக்கும் அவருக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். முந்தைய அதிமுக ஆட்சியில் இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு வழக்கே போட்டது தனிக்கதை. இந்த நிலையில், இப்போது அப்பாவுக்கு எதிராக இன்பதுரை இடித்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்.

உதயநிதி பிறந்த நாள் விழாவில்...
உதயநிதி பிறந்த நாள் விழாவில்...

அண்மையில் திருநெல்வேலியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை திமுகவினர் ஏற்பாடு செய்தார்கள். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் அப்பாவு. இதை டேக் செய்து ட்விட் செய்திருக்கும் இன்பதுரை, ‘கட்சி விழாவில் கலந்துகொண்டு சட்டமன்ற மரபுகளை மீறலாமா..? ஜனநாயக மாண்புகள் மீது பேரவை தலைவரே மண்ணைவாரிப் போடலாமா..? என்னும் தலைப்பிலோ அல்லது சின்னவர் பிறந்தநாள் விழா மூலம் ‘சின்னவர்’ ஆனாரா சபாநாயகர்?’ என்னும் தலைப்பிலோ ஊடகங்கள் விவாதம் நடத்தலாம்’ என கிண்டலடித்து வருகிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in