பாஜக கூட்டணியில் பெரம்பலூரை உறுதிசெய்த பாரிவேந்தர்!

ரவி பச்சமுத்து
ரவி பச்சமுத்து

2024 மக்களவைத் தேர்தலுக்காக மெகா கூட்டணி அமைக்கப் போவதாக ஈபிஎஸ் கூறிவருகிறார். ஏற்கெனவே மெகா கூட்டணியை கையில் வைத்திருக்கும் திமுக, தனது கூட்டணிக் கட்சிகளை இறுக்கமாகப் பிடித்துவைத்திருக்கிறது. ஆனாலும் பாரிவேந்தரின் ஐஜேகே அங்கே நீடிக்காது என்கிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தலிலேயே ஐஜேகே திமுக தயவில்லாமல் தனித்துப் போட்டியிட்டது. இந்த நிலையில், பல மாநிலங்களிலும் உள்ள தங்களது கல்லூரிகளை சிக்கலின்றி நடத்திச்செல்வதற்கு பாஜகவின் தயவு தேவை என நினைக்கிறதாம் பாரிவேந்தர் தரப்பு. அதனால் பாஜகவுடன் இணக்கமாக இருந்துவரும் வேந்தர், 2024 மக்களவைத் தேர்தல் கூட்டணியையும் பேசி முடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

பெரம்பலூர் தொகுதியையே பாரிவேந்தருக்கு மீண்டும் பெற்றுத் தருவதாக பாரிவேந்தருக்கு பாஜக உறுதியளித்திருப்பதாகச் சொல்கிறார்கள். எனினும், இனிமேல் தேர்தலில் போட்டியிடுமளவுக்கு தனக்கு உடல்நிலை இடம்தராது என்பதால், தனக்குப் பதிலாக மகன் ரவி பச்சமுத்துவை நிறுத்த முடிவெடுத் திருக்கிறாராம் பாரிவேந்தர். இதையடுத்து, தந்தைக்குப் பதிலாக தற்போது பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குள் அடிக்கடி வலம் வர ஆரம்பித்திருக்கிறார் தனயன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in