அதிருப்தியில் இருக்கிறாரா ஐ.பெரியசாமி?

ஐ.பெரியசாமி
ஐ.பெரியசாமி

கருணாநிதி காலத்திலிருந்தே தென்மாவட்ட திமுகவில் செல்வாக்கான மனிதராக இருப்பவர் ஐ.பெரியசாமி. அதை உணர்ந்து தான் கருணாநிதி அவருக்கு உரிய அந்தஸ்தை வழங்கி வந்தார். ஆனால், அவரது மறைவுக்குப் பின்னால் அமைந்த திமுக அமைச்சரவையில் ஐ.பி-க்கு அத்தனை முக்கியத்துவம் அளிக்கவில்லை. அண்மை வரவான ராஜ கண்ணப்பனுக்குக்கூட போக்குவரத்துத் துறை ஒதுக்கப்பட்டது. ஐ.பி-க்கு அலார்ட் ஆனதோ செல்லூரார் வைத்திருந்த கூட்டுறவுத் துறை தான். இந்த இலாகாவை ஏற்பதா வேண்டாமா என்பதில்கூட ஐ.பி-க்கு முதலில் தயக்கம் இருந்ததாகச் சொல்வார்கள். இதனால் அப்செட்டில் இருந்த ஐ.பி-க்கு கட்சியிலும் அவ்வளவாய் தனக்கு தனித்துவமான முக்கியத்துவம் இல்லை என்ற வருத்தம் உண்டு. இப்படி அவர் புறக்கணிக்கப்பட்டதற்கு பெரிய வீட்டு மருமகனை பற்றி வெளிப்படையாகப் பேசியதும் தான் என்கிறார்கள். முந்தைய திமுக ஆட்சியில் வீட்டுவசதித் துறைக்கு அமைச்சராக இருந்த ஐ.பி, காவல்துறை அதிகாரி ஜாபர் சேட்டுக்கு மனை ஒதுக்கீடு செய்தது தொடர்பான வழக்கில் சிக்கினார். இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் ஐ.பி-யிடம் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணை குறித்தோ இதில் அடுத்ததாக தான் போகவேண்டிய திசை குறித்தோ திமுக தலைமையிலிருந்து இதுவரை யாருமே அவரிடம் பேசவில்லையாம். இது ஐ.பி-யை ரொம்பவே கவலையில் ஆழ்த்தி இருப்பதாகச் சொல்கிறார்கள் அவருக்கு விசுவாசமான வட்டத்தில் இருப்பவர்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in