திமுகவுக்கு அலாரம் அடித்த ஐ-பேக் டீம்!

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

திமுகவினர் சொல்லிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கும் முதல்வர் ஸ்டாலின், “கட்சிக்கும் ஆட்சிக்கும் அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் யாராவது நடந்து கொண்டால் நடவடிக்கை எடுக்கவும் தயங்கமாட்டேன்” என அறிவித்திருக்கிறார். ஸ்டாலினின் இந்த அறிவுறுத்தலை அடுத்து அமைச்சர் பெருமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள்.

மதம் தொடர்பான சர்ச்சைக்குரிய பேச்சுகளை தவிர்க்கும்படி ஆ.ராசா உள்ளிட்டவர்களிடம் தனிப்பட்ட முறையில் ஸ்டாலின் கேட்டுக்கொண்டதாகவும் சொல்கிறார்கள். இதுதொடர்பாக தன்னிடம் ஸ்டாலின் பேசியவற்றை திக தலைவர் வீரமணியிடம் பகிர்ந்து கொண்டாராம் ராசா. அமைச்சர்களை சந்திக்க வருபவர்கள் செல்போனில் போட்டோ, வீடியோ எடுப்பதையும் கட்டாயம் தவிர்க்கும்படி அறிவுறுத்தி இருக்கிறாராம் ஸ்டாலின்.

மதம் தொடர்பான பேச்சுகளும் அமைச்சர்கள் சிலரது சர்ச்சைக்குரிய கருத்துகளும் நடவடிக்கைகளும் மக்கள் மத்தியில் ஆட்சி மீது அதிருப்தி அலையை படரவிட்டிருப்பதாக பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் டீம் கொடுத்த ரிப்போர்ட் தான் இத்தனைக்கும் காரணமாம். இதையடுத்து, பொது நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் என்ன பேசவேண்டும் என்பது குறித்த ஸ்கிரிப்ட்களை தயாரிக்கும் பொறுப்பும் ஐ-பேக் டீமிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அமைச்சர்களின் நடவடிக்கைகள் மற்றும் பேச்சுகளை கண்காணிக்கும் பொறுப்பும் ஐ-பேக் டீமிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in