உள்ளடி வேலை பார்க்கும் ஒற்றர்கள்!

உள்ளடி வேலை பார்க்கும் ஒற்றர்கள்!

அரசியல் கட்சிகளால் நியமிக்கப்படுபவர்கள் என்பதால் செய்தித் துறையின் பிஆர்ஓ-க்கள் பலரும் தங்களுக்கு வேலைகொடுத்த கட்சி மீது கூடுதல் பிடிப்புடன் இருப்பார்கள். அதனாலேயே, ஆட்சி மாறியதும் பிஆர்ஓ-க்களை இஷ்டத்துக்கு தூக்கி அடிப்பார்கள். முக்கிய இடங்களில் ஆளும்கட்சிக்கு விசுவாசமான பிஆர்ஓ-க்கள் அமர்த்தப்படுவார்கள். இந்த ஆட்சியிலும் அப்படித்தான் செய்திருக்கிறார்கள். ஆனாலும் இரண்டு பக்கமும் சலாம் போடும் சில பிஆர்ஓ-க்கள் இந்த ஆட்சியிலும் பசையான இடங்களில் ஒட்டிக்கொண்டு விட்டார்களாம். இவர்களுக்கு திமுக அமைச்சர்கள் சிலரின் கருணையும் இருக்கிறதாம். இப்படியெல்லாம் ஆள்பிடித்து அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டவர்களில் சிலர், அரசு சம்பந்தப்பட்ட முக்கிய விஷயங்களை எதிர்க்கட்சி முகாம்களுக்கு தந்திரமாகக் கசிய விடுகிறார்களாம். அப்படித்தான் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொள்ளும் கூட்டங்களில் ‘ஆஃப் தி ரெக்கார்டாக’ பேசப்படும் விஷயங்கள் எல்லாம் வெளியில் வருகிறதாம். “நான் உங்களிடம் பேசுவது அண்ணாமலைக்கு எப்படித் தெரிகிறது?” என்று முதல்வர் ஸ்டாலினே அதிகாரிகளிடம் கோபத்தைக் கொட்டுமளவுக்கு இருக்கிறதாம் விசுவாச பிஆர்ஓ-க்களின் உள்ளடி வேலை. இது இப்படி இருக்க, “கடந்த ஆட்சியிலும் எங்களை ஒதுக்கிவைத்தார்கள்... இந்த ஆட்சியிலும் எங்களை ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள். ஆனால், அதிமுக அனுதாபிகளை முக்கிய இடங்களில் வைத்திருக்கிறார்கள்” என்று திமுக ஆதரவு செய்தித்துறை அதிகாரிகள் சிலர் புலம்புகிறார்களாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in