காயத்ரி ரகுராம் கட்சியைவிட்டு விலகியது ஏன் தெரியுமா?

காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராம்

“அண்ணாமலையின் தலைமையின் கீழ் தமிழக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை” என்று சொல்லி பாஜகவைவிட்டு விலகி இருக்கிறார் நடிகை காயத்ரி ரகுராம். இந்த விலகலின் பின்னணியில் வேறு ஒரு தகவல் தமிழக பாஜக வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. பாஜகவில் இருந்துகொண்டே அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்ட அனைத்துத் தலைவர் களையும் விமர்சனம் செய்துவந்தார் காயத்ரி ரகுராம். ஆனால், மத்திய அமைச்சர் எல்.முருகனை மட்டும் எந்தச் சூழலிலும் அவர் விமர்சனம் செய்யவில்லை.

இதைவைத்து, முருகன் கொடுக்கும் தைரியத்தில் தான் காயத்ரி ரகுராம் பொதுவெளியில் விமர்சனங்களை வைக்கிறார் என்று சர்ச்சை வெடித்தது. இந்த நிலையில், அண்ணாமலையின் பெயரைக் குறிப்பிடாமல் அவர் என்ற சொல்லை மட்டும் பயன்படுத்தி தொடர்ச்சியாக ட்விட்டரில் விமர்சனங்களை வைத்து வந்த காயத்ரி நேற்று ‘ஜோக்கர் அண்ணாமலை’ என்று நேரடியாகவே அண்ணாமலையை அட்டாக் செய்திருந்தார்.

அண்ணாமலை
அண்ணாமலை

இந்தத் தகவல் உடனயாக டெல்லி பாஜக தலைமைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாம். இதையடுத்து, ”இனியும் இதையெல்லாம் அனுமதிக்க வேண்டாம். காயத்ரி ரகுராமை கட்சியிலிருந்து டிஸ்மிஸ் செய்திவிடுங்கள்” என்று ஒப்புதல் வழங்கியதாம் தேசிய தலைமை. இந்தத் தகவலை உடனடியாக காயத்ரி ரகுராமுக்கு தெரிவித்துவிட்டதாம் எல்.முருகன் தரப்பு. இதையடுத்தே அவசர அவசரமாக இன்று அதிகாலை 3 மணிக்கு, ‘பாஜகவில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக’ ட்விட் செய்திருக்கிறார் காயத்ரி ரகுராம் என்கிறார்கள் பாஜக வட்டாரத்தில்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in