டிசம்பருக்குள்ள பாஜகவுக்கு வந்துடணும்; வாசனை நெருக்கும் பாஜக!

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசனை ராஜ்ய சபாவுக்கு அனுப்பிய போதே அவரை கட்சிக்குள் இழுத்துப் போடும் பிளானில் இருக்கிறது பாஜக எனப் பேசப்பட்டது. ஆனால், “மூப்பனார் மகன் அதற்கெல்லாம் உடன்படமாட்டார்” என அப்போது ஒரு தரப்புச் சொன்னது. இருப்பினும், அனைத்து விஷயங்களிலும் பாஜக அரசுக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டு வரும் வாசன், பாஜகவுக்கு பகையாளியான திமுகவை சாடியும் வருகிறார்.

இருப்பினும், ”இந்த விளையாட்டெல்லாம் போதும். பேசாமல் கட்சியைக் கலைத்துவிட்டு கூண்டோடு பாஜகவுக்கு வந்துவிடுங்கள்” என்று இப்போது வாசனுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருக்கிறதாம் பாஜக தலைமை. அண்மையில் பாஜக தலைவர் நட்டா, அமித் ஷா, மோடி உள்ளிட்டவர்களைச் சந்தித்துப் பேசி இருக்கிறார் வாசன். அந்த சந்திப்பின் போதுதான், வாசனை பாஜகவுக்குள் வந்துவிடும் படி அறிவுறுத்தினார்களாம்.

“கட்சிக்குள் வந்துவிட்டால் மக்களவைத் தேர்தல் முடிந்ததும் உங்களை மத்திய அமைச்சராக்குவது எங்கள் பொறுப்பு” என்று மூவரும் உறுது சொன்னார்களாம். இருப்பினும், “கட்சி நிர்வாகிகளைக் கலந்து பேசிவிட்டுச் சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு வந்தாராம் வாசன். “தாராளமாக பேசுங்கள். ஆனால், டிசம்பர் மாதத்துக்குள் நீங்கள் பாஜகவுக்குள் வந்துவிடவேண்டும்” என்று உறுதிபடச் சொல்லி அனுப்பி இருக்கிறார்களாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in