அப்பாவுவை விடாது துரத்தும் இன்பதுரை!

இன்பதுரை
இன்பதுரை

சபாநாயகர் அப்பாவுவை அவரை எதிர்த்து நின்று தோற்ற அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான இன்பதுரை விட்டேனா பார் என துரத்திக் கொண்டே இருக்கிறார். ஏற்கெனவே, உதயநிதி பிறந்த நாள் விழாவில் அப்பாவு கலந்துகொண்டதை பிடித்துக்கொண்டவர், “கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சபாநாயகர் பதவிக்கான மாண்பைக் கெடுக்கலாமா அப்பாவு?” என கொக்கிபோட்டார். அடுத்ததாக, “அப்பாவு தன்னோட தொகுதிக்குள்ளயே கல்யாண மண்டபம் கட்டுறது உங்களுக்குத் தெரியுமா..? தொகுதிக்கு அவரு செஞ்சிருக்கிற சாதனை அது ஒண்ணுதான்” என்று மைக் கிடைத்த இடமெல்லாம் அப்பாவுவுக்கு இம்சை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார் இன்பதுரை. அடுத்து, அப்பாவு தொகுதிக்குள் அத்து மீறி ஆட்டம்போடும் குவாரிகள் குறித்தும் அது தொடர்பான ஆளும்கட்சி வரவு செலவு கணக்குகள் குறித்தும் மெகா பட்டியல் தயாரித்து வருகிறாராம் இன்பதுரை!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in