பசும்பொன் பயணத்தை சாமர்த்தியமாக தவிர்த்த ஈபிஎஸ்!

2020 தேவர் ஜெயந்தியின் போது...
2020 தேவர் ஜெயந்தியின் போது...

ஜெயலலிதா இருந்தவரை பெரும்பாலும் தேவர் ஜெயந்திக்கு பசும்பொன் சென்றுவிடுவார். அவருக்குப் பின்னால் ஈபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டவர்களும் அந்த வழக்கத்தைத் தொடர்ந்தார்கள். ஆனால், கடந்த ஆண்டு கரோனா காரணமாக ஈபிஎஸ் பசும்பொன் செல்லவில்லை. இந்த நிலையில், தென் மண்டலத்தில் தனது இருப்பை நிலைநாட்ட இந்த ஆண்டு ஈபிஎஸ் நிச்சயம் பசும்பொன் செல்வார் என்று அதிமுகவினர் எதிர்பார்த்திருந்த நிலையில், பசும்பொன் விசிட்டை தவிர்த்திருக்கிறார் ஈபிஎஸ். அவர் சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துவார் என அறிவிக்கப் பட்டுள்ளது. “தேவரினத்தின் பிம்பமாக ஓபிஎஸ் தன்னைக் காட்டிக்கொள்கிறார். அதை உடைக்க வேண்டுமானால் நீங்கள் கட்டாயம் இந்த ஆண்டு பசும்பொன் செல்வது தான் சரியாக இருக்கும்” என விசுவாச வட்டத்தினர் விசிறினார்களாம். ஆனால், “ஓபிஎஸ்ஸுக்கு தேவரினத்து மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ... ஆனால், நாம் பசும்பொன் போகும் சமயத்தில் அங்கே ஓபிஎஸ் தரப்பினர் திட்டமிட்டு ஏதாவது கலாட்டா செய்துவிட்டால், ஒட்டுமொத்த தேவரினமே தங்களுக்காக நியாயம் கேட்பதுபோல் ஓபிஎஸ் டீம் சீன் போட்டுவிடுவார்கள். அதற்கு இடம்கொடுக்காமல் இருக்க வேண்டுமானால் நாம் அங்கு போகாமல் இருப்பதே புத்திசாலித்தனம். தேவைப்பட்டால் இன்னொரு நாளில்கூட நாம் அங்கே போய்க்கிட்டா போச்சு” என்று சொல்லி பசும்பொன் பயணத்துக்குப் பிரேக்போட்டுவிட்டாராம் ஈபிஎஸ். இருப்பினும், ஓபிஎஸ்ஸுக்கு பயந்து ஒதுங்கினா... நாளைக்கு தென் மண்டலத்துல கட்சியைத் தூக்கி நிறுத்துறது எப்படி?” என்று ஆதங்கக் குரல் எழுப்புகிறார்களாம் ஈபிஎஸ் ஆதரவாளர்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in