அண்ணாமலைக்கு எதிராக ஸ்லீப்பர் செல்களை ஊக்குவிக்கும் ஈபிஎஸ்!

ஈபிஎஸ்
ஈபிஎஸ்

திமுக ஊழல் பட்டியல் குறித்து, அண்ணாமலை பூகம்பம் கிளப்புவார் என எதிர்பார்த்த நிலையில் அது புஸ்வாணம் ஆகிவிட்டதாக பாஜகவினரே கிண்டலடிக்கிறார்கள். இந்த நிலையில், ”முந்தைய அதிமுக அரசின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன்” என அண்ணாமலை முஷ்டி தூக்கி இருப்பது ஈபிஎஸ் தரப்பை ஏகத்துக்கும் சூடாக்கி இருக்கிறது.

அண்ணாமலை தொடர்ந்து அதிமுகவை சீண்டிப் பார்க்கும் வேலைகளைச் செய்துவருவதாக அதிமுக ஆதரவு பாஜக தலைவர்களிடம் வருத்தப்பட்டு பேசினாராம் ஈபிஎஸ். கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இது விஷயமாக பேரவை வளாகத்தில் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோருடன் மனம்விட்டுப் பேசினாராம். இதனையடுத்து, அதிமுக கூட்டணி தொடர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அவர்கள் இருவரும் அண்ணாமலைக்கு எதிரான காய் நகர்த்தலைத் தொடங்கி இருக்கிறார்களாம். இதைவைத்து, “கூடிய சீக்கிரமே அண்ணாமலைக்கு எதிராக பாஜகவில் இன்னொரு பூகம்பம் வெடிக்கலாம்” என்கிறார்கள் ரூட் போட்டுக் கொடுத்திருக்கும் ரத்தத்தின் ரத்தங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in