
உச்சநீதிமன்றத் தீர்ப்பால் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி அதே உற்சாகத்துடன், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனிடம் இருக்கும் நிர்வாகிகளை இழுக்கும் வேலைகளை முடுக்கிவிட்டிருக்கிறாராம். இழுப்புப் பொறுப்பை சேலம் இளங்கோவனிடம் வழங்கியுள்ளாராம். முதல் முயற்சியாக தென்மாவட்டத்தைச் சேர்ந்த அமமுக மண்டல பொறுப்பாளரிடம் ஒரு சுற்று பேச்சுவார்த்தையை இளங்கோவன் முடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். விரைவில் அந்தப் பொறுப்பாளர் தலைமையில் தென் மண்டல அமமுக நிர்வாகிகள் சிலர் ஈபிஎஸ் தலைமையை ஏற்பார்களாம்.
அடுத்தகட்டமாக திருச்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ, மாவட்டப் பொறுப்பாளர் உள்ளிட்டவர்களையும் தங்கள் பக்கம் இழுக்கும் வேலையில் இறங்கி இருக்கிறாராம் இளங்கோவன். தென் மண்டலத்தைத் தொடர்ந்து இவர்களும் கூடிய விரைவில் அதிமுகவில் இணையலாம் என்கிறார்கள்.