
ஓபிஎஸ் மற்றும் சசிகலாவை ஆறுமுகசாமி ஆணையம் காட்டமாக சாடியுள்ளது. இதனால் ஈபிஎஸ் முகாம் உற்சாகத் துள்ளலில் இருந்தாலும் இதுபற்றி வெளிப்படையாக எதுவும் பேசமுடியாமல் இருக்கிறாராம் ஈபிஎஸ். அதற்குக் காரணம், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர். இவரையும் விசாரிக்க வேண்டும் என ஆணையம் அழுத்தமாகச் சொல்லி இருக்கிறது. அப்படி இருக்கையில், ஓபிஎஸ், சசிகலாவை விமர்சனம் செய்தால் பதிலுக்கு அவர்கள் விஜயபாஸ்கரை வீதிக்கு இழுப்பார்கள் என்பதால் இந்த விஷயத்தில் எந்தக் கருத்தும் சொல்லாமல் மௌனச்சாமியார் ஆகிவிட்டாராம் ஈபிஎஸ்.