பேச்சாளர்களுக்கு ஈபிஎஸ் அனுப்பிய தீபாவளி கிஃப்ட்!

ஈபிஎஸ்
ஈபிஎஸ்

ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவில் பேச்சாளர்களுக்கு ராஜ மரியாதை இருக்கும். அவர்களும் தமிழகத்தின் ஏதோ ஒரு ஒன்றியத்தில் முழங்கிக் கொண்டிருப்பார்கள். இப்போது சமூகவலைதள பிரச்சாரங்களே பிரதானமாக இருப்பதால் கட்சிப் பேச்சாளர்களை மறந்தேவிட்டார்கள். இந்நிலையில், திடீரென இந்தத் தீபாவளிக்கு அதிமுக பேச்சாளர்கள், கலைக்குழுவினர் 400 பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் தீபாவளி கிஃப்ட் கொடுத்து அசத்தி இருக்கிறார் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் ஈபிஎஸ்.

அத்துடன் நட்சத்திரப் பேச்சாளர் சிலருக்கு, தானே போன் செய்த ஈபிஎஸ், “ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையால் சசிகலாவின் அரசியல் எதிர்காலம் அஸ்தமனமாகிருச்சு. இனி, ஓபிஎஸ்ஸும் செல்லாக்காசுதான். கட்சியை நான் பார்த்துக்கிறேன். சீக்கிரமே அம்மா காலத்துல இருந்த அதிமுக மாதிரி ஊர், ஊராப் போய்ப் பிரச்சாரம் பண்ணணும்; ரெடியா இருங்க” என்றும் சொன்னாராம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in