
அமைச்சர் துரைமுருகன் பொறுப்பில் இருக்கும் நீர்வளத்துறையில் ஆங்காங்கே முறைகேட்டுப் புகார்கள் தலைதூக்குகிறதாம். துறையின் அதிகாரிகள் சின்னவரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் துரைமுருகனின் பேச்சு அங்கே அவ்வளவாய் எடுபடுவதில்லை என்கிறார்கள்.
கடந்த ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வுசெய்த முதல்வர், உடனடியாக ஏரியைத் தூர்வார உத்தரவிட்டார். இதற்காக 7 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தை ஒரே நிறுவனத்துக்கே ஒதுக்கினார்களாம். ஆனால், நான்கு நிறுவனங்கள் இணைந்து தூர்வாரும் பணியை மேற்கொண்டதாக அதிகாரிகள் தரப்பில் கணக்கெழுதி இருக்கிறார்களாம். அதனால் ஒப்பந்தத்தை எடுத்துச் செய்த நிறுவனத்துக்கு 2 கோடி ரூபாய் மட்டுமே தந்தார்களாம்.
மீதி எங்கு போனது என்று தெரியாத நிலையில், முறையாக தூர்வாரும் பணியை எடுத்துச்செய்த நிறுவனம் இந்த விஷயத்தை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாம். “யார் இப்படிச் செய்தது?” என்று விசாரித்த அமைச்சர், “அந்தாளு விஷயத்துல நான் தலையிட முடியாதுப்பா” என்று கைவிரித்து விட்டாராம்.